புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (13:54 IST)

அக்டோபர் 6 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் – உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் திமுக !

அக்டோபர் 6 ஆம் தேதி திமுக பொது குழு கூட இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன்  செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார்.

திமுக பொதுக்குழு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கூட இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் க அன்பழகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு திமுக பொதுக் குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். அதுபோது பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்’  எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் அதற்கான வேலைகளையும் தொடங்கியுள்ளது. இதனால் இந்த பொதுக்குழுவில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.