திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (20:18 IST)

இனி மெட்ரிக் பள்ளி இயக்ககம், தனியார் பள்ளி இயக்ககமாக மாற்றி அரசானை வெளியீடு..

மெட்ரிக் பள்ளி இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்ககமாக மாற்றுவதற்கு தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

அரசு உதவி பெறாத பள்ளிகள் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், அனைத்தும் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த அரசிதழையும் வெளியிட்டுள்ளது.

மேலும் மெட்ரிக் பள்ளி இயக்ககத்தை தனியார் பள்ளி இயக்ககமாக மாற்றியும் தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.