செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (08:38 IST)

முன்னாள் திமுக எம்.எல்.ஏ காலமானார்!

முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார். சென்னை லாயிட்ஸ் காலனியை சேர்ந்த உசேன், முன்னாள் திமுக எம்.எல்.ஏ மட்டுமின்றி திமுகவின் முன்னாள் தலைமை நிலைய செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த ஆயிரம் விளக்கு உசேன் அவர்களை திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் இன்று காலமானார்.
 
ஆயிரம் விளக்கு உசேன் மறைவு குறித்து திமுக பிரமுகரும், மக்களவை எம்பியுமான தயாநிதி மாறன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியபோது, 'முன்னாள் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் தலைமை நிலைய செயலாளர்களில் ஒருவரும், கழகத்தினர் அனைவரிடத்திலும் அன்பை செலுத்தக்கூடியவருமாகிய ஆருயிர் அண்ணன் ஆயிரம் விளக்கு எஸ்ஏஎம் உசேன் அவர்களின் மறைவு என்பது கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை கண்ணீர்மல்க தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.