வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (10:21 IST)

தூத்துக்குடியை தமிழிசைக்குக் கொடுக்கக் கூடாது – அதிமுகவில் பலத்த எதிர்ப்பு !

அதிமுகக் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு தூத்துக்குடி தொகுதியைக் கொடுக்கக் கூடாது என அதிமுகவில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

சமீபத்தில் அதிமுகவின் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்றது. அப்போது தூத்துக்குடி தொகுதியில் நிற்பதற்காக 41 பேர் விருப்பமனுத் தாக்கல் செய்து இருந்தனர். அவர்களிடம் மொத்தமாக ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் அவர்களிடம் நேர்காணல் நடத்தியதாகவும் அப்போது அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி தொகுதியை பாஜகவுக்குக் கொடுக்காமல் அதிமுகவே அதில் போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

திமுக சார்பாக அந்தத் தொகுதியில் கனிமொழி நிற்க இருக்கிறார் என்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக திமுக அந்த தொகுதியில் சிறப்பாக வேலை செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. அதனால் பாஜகவுக்கு அந்தத் தொகுதியைக் கொடுத்தால் அந்த தொகுதியில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.

பாஜகவின் தமிழிசை அந்தத் தொகுதியில் நிற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரால் கனிமொழியை எதிர்த்துக் கண்டிப்பாக அந்த தொகுதியில் வெற்றி பெற முடியாது. அதுவே வேட்பாளர்கள் நின்றால் ஸ்டெர்லை விவகாரத்தில் நம் அரசுதான சிறப்பாக செயல்பட்டு ஆலையை மூடவைத்தது எனக் கூறி வாக்குக் கேட்கலாம் என்றெல்லாம் அந்தத் தொகுதியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இப்போது அதிமுக தலைமை தூத்துக்குடித் தொகுதியை அதிமுகவிற்குக் கொடுக்கலாமா அல்லது தங்கள் கட்சியே எடுத்துக்கொள்ளாலாமா என யோசனையில் இருப்பதாகத் தெரிகிறது.