1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk election manifesto team discuss with people

3வது நாளாக கருத்து கேட்கும் திமுக தேர்தல் அறிக்கை குழு.. கனிமொழி எம்பி விறுவிறுப்பு..!

திமுக
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 3வது நாளாக கருத்துக்கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழுவினர் கருத்துகளை கேட்டு வருகின்றனர். தற்போது இந்த குழு மதுரையில் பொதுமக்களை சந்தித்து, கருத்துகளை கேட்டு வருகிறது. 
 
ஏற்கனவே தூத்துக்குடி, நாகர்கோவிலில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது மதுரையில் கருத்துக்கேட்கப்பட்டு வருகிறது. தொழில் துறையினர், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்துக்கேட்டு வருகின்றனர்.
 
அடுத்தகட்டமாக சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை குழு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
தரமற்ற முறையில் அரசு பேருந்துகள்..! மக்களுக்கு மாவுகட்டும் இலவசம்..! எடப்பாடி பழனிச்சாமி..!!.