திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2024 (11:49 IST)

அதிமுக கூட்டணியை விரும்பும் அமித்ஷா..! பாஜகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது..! ஜெயக்குமார்.!!

amitsha
அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று அமித்ஷா கூறியுள்ள நிலையில், பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
அதிமுகவுடன் பாஜக நட்பு பாராட்டி வந்த நிலையில், கருத்து வேறுபாட்டால் தற்போது அந்த கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் அதிமுக பாஜக இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. தற்போது அந்தக் கட்சிகளுடைய ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டால் வரும் மக்களவை தேர்தலில், அதிமுகவும் பாஜகவும் தனித்தனியே களம் காண்கின்றன. 
 
இந்நிலையில் அதிமுகவை தங்கள் கூட்டணியில் இணைக்க பாஜக மேலிடம் தீவிரம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
jayakumar
இதற்கு பதில் அளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்களுடைய நிலைப்பாட்டை பொருத்தவரை பாஜகவுக்கு உண்டான கதவுகள் சாத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

 
அதிமுக தொண்டர்கள் யாரும், பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்றும் முன்வைத்த காலை பின் வைக்கப் போவதில்லை என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.