நீங்க என்ன வேணும்னாலும் செய்ங்க – முழு அதிகாரம் கொடுத்த காங்கிரஸ்

rahul
Last Modified சனி, 25 மே 2019 (15:29 IST)
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததை தொடர்ந்து ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகப்போவதாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று கூடிய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல் காந்தி தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிப்பார் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சி தொடர்பான எந்தவிதமான முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரத்தையும் ராகுலுக்கு வழங்கியுள்ளது காங்கிரஸ். காயம்பட்ட சிங்கமாய் இருக்கும் ராகுல் கர்ஜிக்கும் நேரமிது என காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.



இதில் மேலும் படிக்கவும் :