புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (08:26 IST)

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் பூரண ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை திடீரென மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 
 
கருணாநிதிக்கு தொண்டையில் வைக்கப்பட்டுள்ள PEG என்ற குழாயை மாற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று மாலையே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை செய்திக்குறிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 
 
எனவே கருணாநிதியின் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் திமுக தொண்டர்கள் இதனால் பதட்டமடைய வேண்டாம் என்றும் திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.