சற்று நேரத்தில் திமுக வேட்பாளர் பட்டியல் – அறிவாலயத்தில் தொண்டர்கள் !
திமுக சார்பில் போட்டியிட இருக்கும் 20 தொகுதி வேட்பாளர்களின் பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள் , மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு மக்கள் 1, ஐ ஜே கே 1 என பங்கிடப்பட்டுள்ளது.
இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ள 20 தொகுதிகள் தவிர மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக போட்டியிடும் தொகுதிகள் முறையே 1. தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் ஆகும்.
இந்நிலையில் இன்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கானப் பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. இதற்காக தயார் செய்யப்பட்டுள்ள பட்டியலை சற்று நேரம் முன்னர் மெரினாவில் உள்ள கலைஞர் சமாதியில் வைத்து ஸ்டாலின் ஆசிர்வாதம் வாங்கினார். பட்டியல் வெளியீட்டை முன்வைத்து அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் குழும ஆரம்பித்துள்ளனர்.