வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 மார்ச் 2021 (13:30 IST)

திமுக வேட்பாளர் பட்டியலில் புதியவர்களுக்கு வாய்ப்பு அதிகமா?

திமுக இம்முறை புதியவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் ஏற்கனவே எம்எல்ஏ உள்ளவர்களில் பாதிப்பேருக்கு மேல் சீட் கிடைக்காது என்றும் தகவல் வெளிவந்துள்ளது
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவுக்கு 99 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இந்த 99 பேர்களும் மீண்டும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் ஐபேக் ஆலோசனையின்படி இந்த 99 பேர்களில் 50 சதவீதம் பேர்களுக்கு கூட சீட் கிடைக்காது என தெரிகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம் என ஐபேக் ஆலோசனை கூறியுள்ளதாக கூறப்படுகிறது 
 
இதனால் இம்முறை திமுகவில் புதியவர்களுக்கு அதிகமான வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த புதியவர்களில் பெரும்பாலானோர் உதயநிதி ஆதரவாளர்கள் என்று கூறப்படுவதால் சீனியர் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது 
 
மார்ச் 10ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் போது அதில் புதியவர்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்