ராகுல், ப்ரியங்காவுக்கு நன்றி கூறிய பிரசாந்த் கிஷோர்!

Last Modified திங்கள், 13 ஜனவரி 2020 (08:30 IST)
குடியுரிமை சீர்திருத்த சட்டம் சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் பின்னர் ஜனாதிபதி ஒப்புதலுடன் கடந்த 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இருப்பினும் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் கூடிய போது அதில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்று இயற்றப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த தீர்மானத்திற்கு பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த தீர்மானத்தை இயற்ற வழிவகை செய்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு நன்றி என்று அவர் கூறி உள்ளார்

ஏற்கனவே வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோர் தான் அரசியல் ஆலோசனை கூற இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் அவர் காங்கிரஸ் கட்சிக்கும் பணிபுரிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :