செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (18:29 IST)

விடாத கருப்பாய் முரசொலி: வழக்கின் ருட்டையே மாற்றிய திமுக!!

முரசொலி நிலம் குறித்து விசாரிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என திமுக மனு ஒன்றை போட்டுள்ளது. 
 
அசுரன் படத்தை பாராட்டிய ஸ்டாலின், அதன் பின்னர் முரசொலி விவகாரத்தில் சிக்கிக்கொண்டார். முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என ராமதாஸ் கூற, அதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் தமிழக பாஜக செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் இது குறித்து புகார் அளித்த்திருந்தார். 
 
இந்த புகாரின் அடிப்படையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருகிறதா என தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் திமுக தரப்பில் இந்த விசாரணைக்கு தடை கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
ஆம், முரசொலி பஞ்சமி நில விவகாரத்தை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க கூடாது என தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனுத்தாக்கல் செய்துள்ளது. ஆதில், இந்த விவகாரத்தை தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரிக்க அதிகாரம் இல்லை எனவும் திமுக தரப்பு குறிப்பிட்டுள்ளது.