1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (11:20 IST)

அதிமுக அவரச செயற்குழு கூட்டம்: தேதி அறிவிப்பு

ADMK
அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவசர செயற்குழு கூட்டம் குறித்த தேதியை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 
 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பின்னர் ஏப்ரல் ஏழாம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது. 
 
இந்த நிலையில் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இந்த அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva