1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (16:48 IST)

ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்பட வேண்டும் : ஆளுநர் ரவி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் வெளிநாட்டு சதியால் தான் அந்த ஆலை மூடப்பட்டது என்றும் தமிழக ஆளுநர் ரவி பேசியுள்ளார் 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக கூறி தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாணவர்களுடன் நடத்தி கலந்துரையாடலில் ஆளுநர் ரவி பேசிய போது ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீண்டும் செயல்பட வேண்டும் என்பதை எனது விருப்பம் என்றும் வெளிநாட்டு அமைப்புகள் சில ஏராளமான பணத்தை கொடுத்து உள்ளூர் மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாகவும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் வார்த்தை அலங்காரத்திற்காக தான் நிறுத்தி வைக்கிறோம் என்று கூறப்படுகிறது என்றும் அவர் கூறினார். அவருடைய இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran