வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (12:41 IST)

அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளை சந்திக்க பிரேமலதாவுக்கு அனுமதி மறுப்பு

தமிழகமெங்கும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் உயிரிழந்தும் வருகின்றனர். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறரது.  


 


இந்த சூழ்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார். இதையடுத்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா கோவை அரசு மருத்துவமனைக்கு பார்வையிட சென்றார். இதனால் மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தனர். ஆனால் நோயாளிகளை பார்க்க பிரேமலதாவை அனுமதிக்க கூடாது என்று அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனை அறிந்த கட்சியினர் கடும் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் கூறும்போது, நேற்றே முறைப்படி அனுமதி வாங்கிய நிலையில் இன்று திடீரென அனுமதி மறுப்பது சரியல்ல என்றனர்.

இதையடுத்து அவரை மருத்துவமனை டீன் அசோகன் சந்தித்து பேசினார். பின்னர் அவருக்கு  அனுமதி அளிக்கப்பட்டது.