1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMDK vijayakanth discharged and return home

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்: தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்து எழும்பி வரும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மூச்சு திணறல் காரணமாக கடந்த 2 நாட்களாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் கூறியதை அடுத்து டிசார் செய்யப்பட்டார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குணமாகி வீடு திரும்புவதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தெலுங்கானா, கேரளா, ஆந்திரா, புதுவையில் இன்றைய கொரோனா பாதிப்பு!