திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2016 (05:41 IST)

தேர்தல் ஆணையத்திற்கே கெடு வைத்த தேமுதிக

தேர்தல் ஆணையத்திற்கே கெடு வைத்த தேமுதிக

கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தேமுதிக 24 மணி நேர கெடு விதித்துள்ளது.

இது குறித்து, தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி சட்டப் பேரவை  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு சில பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் தேர்தல் கணிப்பு என்ற பெயரில் மக்களுக்கு தவறான தகவலை கொடுத்து வருகின்றனர். மக்களை திசை திருப்புகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும்.
 
எனவே, கருத்துக் கணிப்புகளை வெளியிடும் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மீது 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெடு விதித்துள்ளனர்.