தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தேமுதிக தற்போது கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக, பாமக ஆகிய கட்சிகள் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஆனால் தேமுதிக – அதிமுக கூட்டணி உறுதியாவதில் மட்டும் இழுபறி...