1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (16:52 IST)

தேமுதிகவுடன் பாமகவிற்கு எந்த கருத்து முரண்பாடுகளும் இல்லை: பாமக தலைவர் ஜி.கே.மணி

தேமுதிக இருக்கும் கூட்டணியில் பாமக இருக்காது என்றும் பாமக கூட்டணியில் தேமுதிக இருக்காது என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைய ஒப்புக் கொண்டிருக்கின்றன 
 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் முரண்பாடு கொள்கைகளுடன் இருந்தது என்பது தெரிந்ததே. அக்கட்சியின் தொண்டர்கள் அடிக்கடி அடித்துக்கொள்வார்கள்
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த எல்.கே.சுதீஷ் அவர்கள் பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இணைவதற்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறினார். அந்த வகையில் இன்று பேட்டியளித்த பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் தேமுதிக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருப்பதற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்து இணக்கமாக பணியாற்றினோம் என்றும் கூறியுள்ளார்
 
இதனை அடுத்து பாமக மற்றும் தேமுதிக ஒரே கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது