புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2024 (08:20 IST)

கோட் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்திய தியேட்டர்… ஸ்க்ரீன் ஷாட் போட்டு விமர்சிக்கும் ரசிகர்கள்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கம் டிக்கெட் விலையை 390 ரூபாய் என உயர்த்தி அதிகாரப்பூர்வமாக ஆன்லைனில் விற்பனை செய்துவருகிறது. டிக்கெட் எடுக்கவேண்டுமென்றால் பாப்கார்ன் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கட்டாயமாக வாங்கவேண்டும் என நிபந்தனை வைத்து இப்படி டிக்கெட் விலையை அதிகரிப்பது அப்பட்டமான ஊழல் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.