1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (13:32 IST)

திவாகரன் கட்சி ஆரம்பித்திருப்பது தான் செம காமெடி: கலாய்க்கும் தினகரன்

திவாகரன் கட்சி ஆரம்பித்திருப்பது ஒரு காமெடியான நிகழ்வு என ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டது. முதலில் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், சசிகலா சிறை சென்றதற்கே தினகரன் தான் காரணம் என குற்றம் சாட்டினார்.
 
மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். நேற்று அம்மா அணி என்ற கட்சியின் பெயரை மாற்றி, அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டு, கட்சிக்கான கொடியையும் வெளியிட்டார் திவாகரன். 
இதுகுறித்து பேசிய தினகரன், திவாகரன் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதுதான் இந்த மாதத்தில் நான் கேட்டு ரசித்த சிறந்த காமெடி. அவருக்கும் அண்ணாவிற்கும் என்ன சம்பந்தம்? இவரை நம்பி யார் கட்சியில் இணைவார்கள் என வினவினார். மேலும் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கும் எடப்பாடி அரசு விரைவில் காணாமல் போகும் என்றும் அமமுக பெரும்பான்மை வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.