1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஜூன் 2018 (16:28 IST)

ரஜினி, கமல், திவாகரன் எல்லாம் காணாமல் போவார்கள்; அமைச்சர் சிவி சண்முகம்

அமைச்சர் சி.வி சண்முகம் புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் ரஜினி, கமல், திவாகரன் என யாராக இருந்தாலும் விரைவில் காணாமல் போய்விடுவார்கள் என கூறியுள்ளார்.
 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டது. இதனால் பலர் கட்சியை ஆரம்பிக்கப்போவதாக தெரிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சசிகலாவின் சகோதரர் மன்னார்குடியில் திடீரென திவாகரன் அம்மா அணி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், தனது கட்சியின் பெயரையும், கட்சி கொடியையும் வெளியிட்டார். முன் வெளியிட்ட அம்மா அணி என்ற கட்சியின் பெயரை மாற்றி, தற்பொழுது அண்ணா திராவிடர் கழகம் என தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளதாகவும், கட்சிக்கான கொடியையும் வெளியிட்டுள்ளார் திவாகரன். 
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புதிதாக கட்சித் தொடங்கியவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் காணாமல் போவார்கள். அதற்கு திவாகரன், தினகரன், ரஜினி, கமல் என யாரும் விதிவிலக்கல்ல என அவர் கூறினார். முன்னதாக ஈபிஎஸ் ஓபிஎஸ் சண்டையின் போது ஓபிஎஸ்ஐ, இவர் தரக்குறைவாக பேசியது குறிப்பிடத்தக்கது.