செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (18:34 IST)

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு: தொடர்ந்து சென்னை முதலிடம்

தமிழகத்தில் கொரோனா வைரசால் தினமும் சராசரியாக 50 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 69 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 690 என்றும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் தகவல் குறித்து தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி வழக்கம்போல் சென்னை மாவட்டத்தில் 95 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இன்று மட்டும் 39 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையை அடுத்து கோவையில் 58 பேர்களும், திண்டுக்கல்லில் 45 பேர்களும், நெல்லையில் 38 பேர்களும், ஈரோட்டில் 32 பேர்களும், திருச்சியில் 17 பேர்களும் நாமக்கல் மாவட்டத்தில் 25 பேர்களும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 22 பேர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 பேர்களும் மதுரையில் 19 பேர்களும் கரூரில் 23 பேர்களும் தேனியில் 23 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறைந்தபட்சமாக தமிழகத்தில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக தலா ஒருவர் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது