1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (18:16 IST)

மாஸ்க் அணிந்தால் கொரோனா வராதா? கிண்டல் செய்த வாலிபரின் பரிதாபநிலை!

மாஸ்க் அணிந்தால் கொரோனா வராதா என்றும், கடவுளாலேயே காப்பாற்ற முடியாத கொரோனாவை, இந்த சின்ன துணி காப்பாற்றிவிடுமா? என்று கேலி செய்து டிக்டாக் வீடியோ ரிலீஸ் செய்த ஒரு இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் பிரபலமானவர். இவருடைய ஒவ்வொரு வீடியோவுக்கும் லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறிய இளைஞரை பார்த்து ’இறைவனாலேயே காப்பாற்ற முடியாத கொரோனாவிடம் இருந்து இந்த சின்ன துணியா காப்பாற்றிவிடும்? என்று கிண்டல் செய்யும் வகையில் அந்த வீடியோ இருந்தது. இந்த வீடியோவும் டிக்டாக்கில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தனி வார்டில் இருக்கும் அவர் ஒரு டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் தனது முந்தைய வீடியோவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்