ரஜினியை விமர்சித்தால் பாரபட்சமின்றி பதிலடி கொடுக்கப்படும்: திரைப்பட இயக்குனர்!

ரஜினியை விமர்சித்தால் பாரபட்சமின்றி பதிலடி கொடுக்கப்படும்
siva| Last Updated: திங்கள், 21 டிசம்பர் 2020 (07:40 IST)
ரஜினியை விமர்சித்தால் பாரபட்சமின்றி பதிலடி கொடுக்கப்படும்
ரஜினியை மோசமாக விமர்சனம் செய்தால் பாரபட்சமின்றி நாகரீகமான முறையில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என திரைப்பட இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மக்கள் சேவை கட்சி என்ற கட்சியை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தனது கட்சி குறித்த அறிவிப்பை அவர் இம்மாதம் 31ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்

இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரை ஒருசிலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அரசியலில் விமர்சனம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான் ஆனால் தனிமனித தாக்குதலை செய்து வருபவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்

இந்த நிலையில் ரஜினியை மோசமாக விமர்சனம் செய்யும் நபர்களுக்கு நாகரீகமான முறையில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இயக்குனர் ராணா தெரிவித்துள்ளார். இவர் ஹிப்ஹாப் தமிழா நடித்த \நான் சிரித்தால்\ என்ற படத்தின் மூலம் இயக்குனரானவர் என்பதும் தற்போது அடுத்த படத்திற்கான பணிகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: ஒரு நல்ல மனிதன், நல்ல நோக்கத்துடன் வரும்போது, அவர் மீது வன்மம் உமிழ்ந்து கொண்டும், அவரின் மதிப்பை, எண்ணத்தை குறைத்து பேசிக்கொண்டும் இருப்பவர்களை கண்டு ஒதுங்கி

இருக்க முடியாது. நாகரீகமான முறையில் தக்க பதிலடிகள்கள் பாரபட்சம் பார்க்காமல் கொடுக்கப்படும்! இனி போர் நேரம்


இதில் மேலும் படிக்கவும் :