வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2019 (09:04 IST)

ராஜராஜ சோழன் மட்டும் உயிரோடு இருந்தா... ஜாமின் கிடைத்த கையோடு பா.ரஞ்சித் சர்ச்சை பேச்சு!

இயக்குனர் பா.ரஞ்சித் மாமன்னர் ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் எனது விமர்சனத்தை ஏற்று இருப்பார் என பேசியுள்ளார். 
 
மன்னர் ராஜராஜ சோழன் குறித்து தவறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முஞாமீன் பெற்றுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் மீண்டும் சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார். 
 
சென்னை சேத்துப்பட்டில் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், ராஜராஜ சோழன் குறித்து நான் பேசியதை எந்தவொரு இடத்திலும் மறுக்கவில்லை. ராஜராஜ கோழன் தற்போது உயிருடன் இருந்தால் என் விமர்சனத்தை ஏற்று உன்னுடன் உரையாட வந்திருப்பார் என கூறினார். 
அதோடு, ஒரு குறிப்பிட்டவர்களிடம் மட்டும் இங்கு ஏன் நிலம் உள்ளது? எங்களிடம் நிலம் ஏன் இல்லை? என ஆராஉந்து உள்ளேன். என் பேச்சு பிறரை கோபப்படுத்தி இருந்தால் தவறு எதிர்ப்பவர்களிடம்தான் உள்ளது. என் மீது இல்லை என பேசியுள்ளார். 
 
ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி தற்போது அதில் இருந்து வெளிவந்துள்ள அவர் மீண்டும் இவ்வாறு பேசியுள்ளது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.