1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 21 ஜூன் 2017 (13:06 IST)

ஆடு நனைகிறதென ஓநாய் கவலை - விஷாலை தாக்கிய இயக்குனர் சேரன்?.

ஆடு நனைகிறதென ஓநாய் கவலை - விஷாலை தாக்கிய இயக்குனர் சேரன்?.
தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என நடிகர் விஷால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


 

 
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் சேரன் “ஆடு நனைகிறதென ஓநாய்கள் கவலை கொள்ளும். விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கைவிடுவார்கள். அவர்களை முதலில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்யச் சொல்லுங்க” என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் மறைமுகமாக விஷாலைத்தான் குறிப்பிட்டுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. சில வருடங்களாகவே, இயக்குனர் சேரனுக்கும், விஷாலுக்கும் மோதல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.