1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (10:58 IST)

பொறியியல் நேரடி 2ம் ஆண்டு படிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்”

engineering
நேரடியாக பொறியியல் இரண்டாம் ஆண்டு படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வி தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் டிப்ளமோ முடித்தவர்கள் நேரடியாக பொறியியல் இரண்டாம் வகுப்பில் சேரலாம் என்று அறிவித்து இருந்தது
 
இந்த நிலையில் டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் இரண்டாம் வகுப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கழகம் அறிவித்துள்ளது. https://www.ptbe.tnea.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் 0422-2590080 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தொழில்நுட்ப கல்வியகம் தெரிவித்துள்ளது.
 
இதனை அடுத்து பாலிடெக்னிக் பிடித்த பல மாணவ மாணவிகள் நேரடியாக பொறியியல் இரண்டாம் வகுப்பு படிக்க விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது