1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (08:21 IST)

திருச்சி உள்பட 4 மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் சமீபத்தில் நகராட்சி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக தற்போது மேலும் நான்கு மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனை அடுத்து திருச்சி திண்டுக்கல், ஆவடி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நான்கு மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநகராட்சியின் புதிய ஆணையர் குறித்த விபரம் இதோ:
 
திருச்சி மாநகராட்சி ஆணையர் - முஜிபூர் ரஹ்மான்
 
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் - சிவசுப்பிரமணியம்
 
ஆவடி மாநகராட்சி ஆணையர் - சிவகுமார் 
 
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் - சரவணகுமார்