செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (12:34 IST)

தேவர் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டார் திண்டுக்கல் சீனிவாசன்.. ஓபிஎஸ் நிலை என்ன?

தேவர் தங்க கவசத்தை பெற்றுக் கொண்டார் திண்டுக்கல் சீனிவாசன்.. ஓபிஎஸ் நிலை என்ன?
மதுரை வங்கி பெட்டகத்தில் இருந்த தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்பெற்றுக் கொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
வரும் 30ஆம் தேதி, பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் சாலை மார்க்கமாக பசும்பொன் கொண்டு செல்லப்படுகிறது
 
அதிமுக சார்பில் 2014ல் ரூ.4.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் தங்க கவசம் வழங்கப்பட்டது. மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் தேவர் தங்க கவசம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கவசத்தை அதிமுக பொருளாளரிடம் மட்டுமே தர வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும் நிலையில் அதனை திண்டுக்கல் சீனிவாசன் இன்று பெற்று கொண்டார். இதனால் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran