வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (19:48 IST)

திருவாரூர் இடைத்தேர்தலில் தினகரன் என்ன சின்னத்தில் போட்டியிடுவார்...?

திருவாரூர் இடைத்தேர்தலில்  அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு தினகரன் வெற்றிபெற்றார்.  இந்நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தினகரன் முடிவு செய்துள்ளார்.
 
குக்கர் சுயேட்சை சின்னம் எனபதால் தேர்தலின் போது வேறு யாருக்கும் ஒதுக்கக்கூடாது எனவும்  தன் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
 
இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பு கோரினர். ஆனால்  அவர்களின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் வரும் 7 ஆம் தேதி விசாரனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்