திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2018 (19:28 IST)

ஜெ. பாணியில் தினகரன்: மக்கள் மத்தில் வரவேற்பு!

ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன் பொதுமக்களிடம் பேசும் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் பேசி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். 
சமீபத்தில் தஞ்சாவூரில் தினகரன் பின்வருமாறு பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. மத்திய பாஜகவின் பினாமி ஆட்சி. கமிஷன் மண்டி ஆட்சி. ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா முதல்வராக்கினார். அவர் மத்திய அரசின் ஏஜென்டாக மாறியதால், அவரை பதவியில் இருந்து தூக்கினோம்.
 
சசிகலா சிறை சென்றவுடன் பழனிசாமியை முதல்வராக்கினோம். ஆனால், அவரோ பாஜக மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து கட்சியைக் கைப்பற்றினார். ஆனாலும், 90 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர்.
 
பின்னர் ஜெயலலிதா பாணியில், எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் உங்களுக்கு பணம் கொடுத்து இங்கு அழைத்து வந்தார்களா? என கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். அப்போது ஆரவாரமான மக்கள், இல்லை, நாங்களாகவே வந்தோம் என தெரிவித்தனர்.