செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (15:37 IST)

15 திமுக எம்.எல்.ஏக்கள் விரைவில் அதிமுகவில்! - தினகரன் அதிர்ச்சி தகவல்

15 திமுக எம்.எல்.ஏக்கள் விரைவில் அதிமுகவில்! - தினகரன் அதிர்ச்சி தகவல்
திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நேற்று திருவொற்றியூரில் நடைபெற்றது. அதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது : 
ஆர்.கே.நகர் தொகுதியில் நமது வேட்பாளரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகத்தினர் வெற்றி பெற செய்ய வேண்டும்.  பத்து, பதினைந்து திமுக எம்.எல்.ஏக்கள் எங்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.  அவர்கள் விரைவில் அதிமுகவில் இணைவார்கள். அடுத்தவர் வீட்டில் திமுக திருடப்பார்க்கிறது - ஆனால், உங்கள் (திமுக) வீட்டு பொருளை இழக்க போகிறீர்கள் என்பதை திமுக பின்னர் தெரிந்துகொள்ளும்.
 
ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற மு.க.ஸ்டாலின் பகல் கனவு பலிக்காது. ஓ.பி.எஸ் அணிக்கு சென்று விட்ட அருண்குமார் எம்.எல்.ஏ விரைவில் நமது அணிக்கு திரும்புவார். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின் ஓ.பி.எஸ் அணி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்” என அவர் பேசினார்.