1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 டிசம்பர் 2017 (06:32 IST)

இடைத்தேர்தலில் வெற்றி: பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பரபரப்பில் மற்ற மாநில இடைத்தேர்தலின் முடிவுகளை தமிழக ஊடகங்களும், தமிழக மக்களும் மறந்தே போனார்கள். நேற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டபோதே உத்தரப்பிரதேசம் மாநிலம் சிகந்தரா தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள லிகாபலி, பக்கே தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன

இந்த மூன்று இடைத்தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்ததோடு, வெற்றிக்காக உழைத்த பாஜக தொண்டர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் கூறியுள்ளார்

ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் குறித்து கருத்துக்கள் எதையும் அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது