1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 மார்ச் 2018 (09:36 IST)

தினகரனுக்கு கிடைக்குமா குக்கர்? இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு

தினகரனுக்கு கிடைக்குமா குக்கர்? இன்னும் சில நிமிடங்களில் தீர்ப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக ஈபிஎஸ்-ஓபிஎஸ் என இரண்டாக உடைந்தது. பின்னர் இரு அணிகளும் ஒன்றிணந்தபோது திடீரென தினகரன் அணி என்ற புதிய அணி உருவாகியது.

இந்த நிலையில் ஒன்றிணைந்த அதிமுகவிற்கு இரட்டை இலை மற்றும் கட்சியின் அங்கீகாரம் கிடைத்தது. இருப்பினும் சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன்.

எனவே செண்டிமெண்டாக தனக்கு குக்கர் சின்னத்தையே அடுத்து வரும் தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்ற நிலையில் டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாக வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்