வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (11:22 IST)

எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருக்கிறாரா தினகரன்?: அப்ப கூவத்தூரில் நடந்தது என்ன?

எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருக்கிறாரா தினகரன்?: அப்ப கூவத்தூரில் நடந்தது என்ன?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரனுக்கு ஆதரவாக 19 எம்எல்ஏக்கள் புதுச்சேரில்யில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை தினகரன் அடைத்து வைத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.


 
 
சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவை நம்பி தான் மக்கள் வாக்களித்தார்கள். அவரது அரசு தொடர வேண்டும். எம்எல்ஏக்கள் மக்களுக்கு நல்ல செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட வேண்டும். மக்கள் பணி குறித்து ஆலோசிக்க எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கம் உள்ளது. இந்த கூட்டத்துக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
எம்எல்ஏக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போட்டி கூட்டம் நடத்துவார்கள் என்ற யூகத்திற்கு பதில் அளிக்க முடியாது. எம்எல்ஏக்களை தினகரன் அடைத்து வைத்திருப்பதை ஏற்க முடியாது என கூறினார்.
 
ஆனால் அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியபோது சசிகலா, தினகரன் ஏற்பட்டில் அவர்களது கட்டுப்பாட்டில் கூவத்தூர் சொகுசு விடுதியில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரும் இருந்தார். அப்போது தினகரன் எம்எல்ஏக்களை அடைத்து வைத்திருக்கிறார் என ஜெயக்குமார் ஏன் கூறவில்லை என சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.