எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது! தமிழண்டா....


sivalingam| Last Modified செவ்வாய், 17 அக்டோபர் 2017 (15:28 IST)
மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று தனது இறுதிகாலம் வரை போராடியவர் தந்தை பெரியார். ஆனால் பெரியாரின் இந்த மண்ணில்தான் மூடநம்பிக்கைகள் கோரத்தாண்டவம் ஆடி வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.


 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு கட்டுமான நிறுவனம் வேலைக்கு ஆள் எடுக்க தின நாளிதழ் ஒன்றில் விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் தங்கள் நிறுவனத்தின் பிசினஸ் டெவலப்மேண்ட் மேனேஜர் மற்றும் சேல்ஸ் மேனேஜர் பணிக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்து கல்வித்தகுதி உள்பட மற்ற தகுதியையும் அறிவித்திருந்தது
 
இதில் என்ன மூடநம்பிக்கை என்று கேட்கின்றீர்களா? இந்த பணிக்கு நேர்முகத்தேர்வுக்கு வருபவர்கள் கண்டிப்பாக மிதுனம், ரிஷபம், கன்னி, தனுசு, கும்பம், மகரம், கடகம் ராசியை சேர்ந்தவர்கள் மட்டுமே வரவேண்டும் என்பதுதான் முக்கிய நிபந்தனை. இப்போது சொல்லுங்கள் ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் நம்மை திருத்த முடியுமா?
 


இதில் மேலும் படிக்கவும் :