செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2017 (19:25 IST)

மலையாளத்தில் த்ரிஷாவின் விளம்பரப் படம்

விழிப்புணர்வுக்காக மலையாளத்தில் விளம்பரப் படம் ஒன்றில் த்ரிஷா நடித்துள்ளார்.


 

 
கேரள அரசும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து, தட்டம்மை நோய்க்கான தடுப்பூசி போடுவதை ஊக்கவிக்கும் விழிப்புணர்வு விளம்பரத்தை நேற்று வெளியிட்டன. இந்த விளம்பரத்தில், த்ரிஷா நடித்துள்ளார். அதில், அவர் மலையாளத்தில் பேசி, தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கான அவசியத்தை விளக்கிக் கூறுகிறார்.
 
அவர் வாயசைக்க, வழக்கம்போல அவருக்கு டப்பிங் கொடுக்கும் சின்மயி பேசியுள்ளார். இந்த வீடியோ, கேரளாவில் பிரபலமாகி வருகிறது. என்னதான் சென்னைப் பெண் என்று த்ரிஷாவைச் சொன்னாலும், அவர் அப்பா கிருஷ்ணன் மலையாளத்தைச் சேர்ந்தவர். கேரளாவில் உள்ள பாலக்காட்டில்தான் த்ரிஷா பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.