1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (08:16 IST)

100-ஐ தொட்ட டீசல் விலை: வாகன ஓட்டிகள் ஷாக்!

தமிழக வரலாற்றில் முதல் முறையாக டீசல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி கொண்டு வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
இந்நிலையில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக டீசல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பின்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 103.92-க்கும், டீசல் 33 காசுகள் அதிகரித்து ரூ.99.92 -க்கும் விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.