1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (23:31 IST)

'எனிமி 'திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை- தயாரிப்பாளர்

நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடித்த ‘எனிமி’ திரைப்படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது .

இந்நிலையில், விஷாலின் எனிமி படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டது.ஆனால், எனிமி என்ற படத்திற்கு தியேட்டர்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை எனத் தயாரிப்பாளர் தெரிவித்துளார்.