வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 டிசம்பர் 2023 (18:16 IST)

டாய்லட் சுத்தம் செய்யும் தமிழக மாணவர்கள்.. தயாநிதி மாறன் சொன்னது என்ன ஆச்சு?

இந்தி பேசும் மக்கள் தமிழகத்திற்கு வந்து டாய்லெட் சுத்தம் செய்கிறார்கள் என்றும் தமிழ் மாணவர்கள் ஆங்கிலம் படித்ததால் பல பெரிய கம்பெனிகளில் அதிக சம்பளத்தில் பணிகள் இருக்கிறார்கள் என்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தயாநிதி மாறன் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழக மாணவர்கள் மத்தியில் ஜாதி பாகுபாடு அதிகம் இருப்பதாகவும் குறிப்பாக தலித் மாணவர்கள் டாய்லெட் சுத்தம் செய்யும் பணியை செய்வதாகவும் ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மாணவர்களுக்கு இடையே தண்ணீர் குடிக்க தனித்தனி டம்ளர்கள் வைத்திருப்பது என பல்வேறு சாதிய வேறுபாடுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள 30 சதவிகித பள்ளிகளில் ஜாதி பாகுபாடு காட்டப்படுவதாக ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல் உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran