முதல்வரை பார்க்க சென்ற திமுக எம்.பி; தடுத்து நிறுத்திய போலீஸ்! – தருமபுரியில் பரபரப்பு

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:23 IST)
தருமபுரியில் அரசு விழாவிற்காக வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திமுக எம்.பி செந்தில்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கலில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் தருமபுரியில் கொரோனா நடவடிக்கைகளை முதல்வர் கண்காணிக்க வந்த போது அம்மாவட்ட திமுக எம்.பி செந்தில்குமார் முதல்வரை சந்திக்க வந்துள்ளார்.

ஆனால் முதல்வரை சந்திக்க விடாமல் செந்தில்குமாரை போலீஸ் தடுத்ததால் அங்கு வாக்குவாதம் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் எதிர்கட்சியினரை முதல்வரை சந்திக்க விடாமல் தடுப்பது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அமைச்சர் சிவி சண்முகம் எதிர்கட்சியினரை முதல்வரை சந்திக்க விடாமல் தடுப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

ஊழியர்கள் மட்டும் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு மட்டும் தடை.. என்ன காரணம்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..

சிங்கப்பெண் விழா ரத்து!.. ஜெகதீஷ் இல்ல விழாவுக்கு போன முதல்வர்!.. கொதிக்கும் நெட்டிசன்கள்!..

திருச்செந்தூர் கோவிலில் லஞ்சம்!.. 2 காவலர்கள் டிஸ்மிஸ்!.. ஐயருக்கு பூஜை செய்ய தடை!...

லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த அமைச்சர் ரமேஷ்.. வெறும் மன்னிப்பு கடிதம் எல்லாம் கிடையாது...

தகுதியற்ற வேட்பாளர்களுக்கு வாரி வழங்கப்பட்ட வாய்ப்பு: காங்கிரஸ் தலைமை குறித்து ஜோதிமணி குற்றச்சாட்டு...

அடுத்த கட்டுரையில்
Show comments