ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மே 2021 (09:06 IST)

தருமபுரியில் குவியும் கொரோனா சடலங்கள்; எரிக்க இடம் இல்லாமல் திணறல்!

தருமபுரியில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் சடலம் ஏராளமாக வருவதால் எரியூட்டுவதில் சிரமம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையிலும் அருகில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும் கொரோனா நோயாளிகள் வருவதால் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அனைத்து நோயாளிகளுக்கும் படுக்கை வசதி கிடைக்காத நிலையில் மருத்துவமனை வளாகங்களில் நோயாளிகள் காத்து கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கு பதிலான மருத்துவமனை அருகில் உள்ள பச்சையம்மன் மயானத்தின் அருகே தகன மேடையில் எரியூட்டுவதாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக தகனமேடை பழுது காரணமாக கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடல்கள் பச்சையம்மன் மயானத்திலேயே எரிக்கப்படுவதாகவும் அதனால் ஏற்படும் புகை மூட்டம் நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள், மருத்துவமனை நோயாளிகளையும் பாதிப்பதாக கூறப்படுகிறது. மேலும் எரியூட்ட இடம் கிடைக்காமல் சடலங்கள் காத்திருப்பில் கிடப்பதாகவும் கூறப்படுவதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.