சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துக்கள்.. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பதிவுகள்..!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது 'X' சமூக வலைதள பக்கத்தில், "மேற்கு வங்க முதல்வர் சகோதரி மம்தா பானர்ஜி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், மம்தா பானர்ஜியின் அரசியல் கொள்கைகளை பாராட்டியுள்ளார். "சகோதரி மம்தா பானர்ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். முதலமைச்சராக உங்கள் ஆட்சி நிர்வாகத்தின் கொள்கையாக மதச்சார்பின்மையை நிலைநிறுத்தியதோடு, இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதை உறுதி செய்துள்ளீர்கள். ஆட்சி செய்வதற்கான உங்களின் இந்த அனைத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறை, இந்திய அரசியல் அமைப்பு விழுமியங்களையும் சமூக நல்லிணக்கத்தையும் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Mahendran