திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 19 மே 2022 (18:44 IST)

அரசாணை வெளியான சில நிமிடங்களில் கனகசபை மீது ஏறி வழிபட்ட பக்தர்கள்!

chidambaram
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடலாம் என தமிழக அரசின் அரசாணை இன்று காலை வெளியான நிலையில் அரசாணையை வெளியான சில நிமிடங்களில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்ட காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி வழிபட தீட்சதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது என்பது குறிபிடத்தக்கது
 
 இந்த நிலையில் இன்று காலை தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பெரும்பான்மையான பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதாக வெளியிடப்பட்டிருந்தது
 
 இந்த அனுமதியை அடுத்து தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை முதல் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபாடு செய்து வருகின்றனர்
 
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது