விக்கிரவாண்டிக்குள் நுழைந்தது ராணுவம்! – தேர்தல் பரபரப்பு!
தமிழக சட்டசபை தொகுதியான விக்கிரவாண்டியில் இடைதேர்தலை முன்னிட்டு இராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்ற தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 21 நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமியும் போட்டியிடுகின்றனர். மேலும் ஒன்பது சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகிறார்கள்.
தேர்தலை ஒட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 5ம் தேதி வாக்கு சேகரிப்பு கூட்டம் நடைபெற்றது. அதுபோல அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் வாக்கு சேகரிப்புக்காக விக்கிரவாண்டி வர இருக்கிறார்கள். முக்கிய அரசியல் தலைவர்கள் வரவிருப்பதால் விக்கிரவாண்டி, நாங்குநேரி பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் விபரீதங்கள் ஏதும் எழாமல் இருக்கவும், தேர்தல் கையூட்டு வழங்குவதை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.