செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (18:44 IST)

கருவூரில் திராவிடத் தமிழர் கலை இலக்கியப் பேரவை துவக்க விழா!

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை!
 
இன்று காலை கருவூர் ஹோட்டல் அழகம்மை மஹாலில் திராவிடர் தமிழர் கலை இலக்கியப் பேரவை துவக்க விழா நடைபெற்றது.
முனைவர் கடவூர் மணிமாறன் தலைமை தாங்கினார்.புலவர் திண்டுக்கல் ஜெயபால் சண்முகம் பொதுச் செயலாளர் வரவேற்புரை ஆற்றினார்
 
சாகித்திய அகாதெமி விருதாளர் எழுத்தாளர் பொன்னீலன்பேரவையை துவக்கி வைத்து உரை ஆற்றிய போது தேவையான நேரத்தில் தேவையான இவ்வமைப்பு துவக்கப்படுகிறது என்றார் இவ்வமைப்பு பரவ வேண்டும் என்றார் உலக அரங்கில் இந்தியாவின் சேவை சமத்துவம் ஆகியவற்றின் முன் உதாரணம் யார் என்ற கேள்விக்கு தந்தை பெரியார் என்று கூறியதாய் சொன்னார் கிராண்ட் அணை என வெள்ளையன் கூறிய கல்லணை, மருத்துவம், வானவியல் முடங்கியது ஏன் எனக் கேட்டார்.
 
மேலும், தந்தை பெரியார் மாமனிதராகப் போற்றப்பட வேண்டியவர் என்றார். புலவர் செந்தலைகவுதமன் வாழ்த்துரை ஆற்றிய போது கருவூரில் இவ் அமைப்பு துவக்க விழா காண்பது சிறப்பு என்றார் 1938ல் மொழிப்போர் துவக்கிய ஊர்கருவூர் என்றார். தந்தை பெரியாரின் ஆசிரியர் கருவூர் மருதையாபிள்ளை என்றார்.
 
இயக்கத்தையும் - அறிவாளர்களையும் இப்பேரவை இணைக்க வேண்டும் என்றார். பேரறிஞர் அண்ணா - நடிகவேள் ராதா -கலைவாணர் போன்றவர்கள் கலை இலக்கியத்தால் சிறந்த பெருமக்கள் என்றார் 1922ல் இந்தி எதிர்ப்பு கருவூரில் துவங்கியது என்றார் ஆரியத் தமிழன் போல திராவிடத் தமிழர் நாம் நம் திருக்குறளை கடைப்பிடித்து இவ் இயக்கம் அமைப்பு வளர வேண்டும் என்றார்.
 
தோழர் ஓவியா,கவிஞர் நந்தலாலா, திரைப்படப் பாடல் ஆசிரியர் யுகபாரதி கலை இலக்கிய செயல்பாடு கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
 
தொடர்ந்து இப்பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையில் அரசியலின் கடுமையான சூழலில் கலை இலக்கியம் மூலம் மக்களை இப்பேரவை நெறிப்படுத்தும் என்றார். கலை இலக்கியம் மக்களை எளிதில் சென்றடையும் என்றார் கலை இலக்கியம் மனித வாழ்வை நெறிப்படுத்தும் என்றார் சமத்துவம் சகோதரத்துவம் போற்றும் அனைவரும் இப்பேரவையில் பங்கேற்கலாம் என்றார் திராவிடத் தமிழர் நாகரிகம் கீழடி நாகரிகம் என்றார் தென்னை என்றாலே மரம் தான் ஆனால் தென்னை மரம் என்கிறோம் இது இரு பெயர் ஒட்டு பண்டித் தொகை என்றார்.
 
ஆதிக்கத்தை எதிர்க்கும் தமிழர்கள் திராவிடத் தமிழர்கள் என்றார்புலவர் செல்ல கலைவாணர் நன்றி கூறினார்.
 
தமிழ்ச் செம்மல் மேலை  பழனியப்பன் தொகுத்து வழங்கினார். கவிஞர் முத்தரசன் தமிழழகன் கவிஞர் கருவூர் கன்னல் குமாரசாமி பேராசிரியர் சுந்தரம், ராதா முனைவர் அழகர் தமிழன் குமாரசாமி எசுதர், கவிஞர் நன் செய் புக மூர் அழகரசன், ஆடிட்டர் தண்டபாணி, ப.தங்கராசு குறள கன், சே.அன்பு வையாபுரி, சோமசுந்தரம் க.ப.பாலு, திருமூர்த்தி  உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.