திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 டிசம்பர் 2025 (08:39 IST)

இது கட்சி மாற்றமில்லை, பிராஞ்ச் மாற்றம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..!

இது கட்சி மாற்றமில்லை, பிராஞ்ச் மாற்றம்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்..!
டெல்லியில் அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்த செங்கோட்டையன் அவருடைய ஆலோசனைப்படி ஒரு கட்சியில் சேர்ந்து விட்டார், இது கட்சி மாற்றமல்ல பிராஞ்ச் மாற்றம் என்று ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்த கட்சிகள் சேரலாம் என்று அனுமதி வாங்கிவிட்டு தான் சேர்கிறார்கள் என்றும் அவர் கிண்டலாக பேசினார்.
 
மேலும் தமிழ்நாட்டில் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளுக்கு டெல்லி தான் தலைமை அலுவலகமாக இருக்கிறது என்றும் அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் அதன் பின்னர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார் என்பதும் அதனை அடுத்து அவர் தாமாக தமிழக வெற்றி கழகத்தில் இணையும் முடிவெடுத்ததை தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு விமர்சித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva