1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu Excluded from Union Government's Education Funds?

2024-2025 ஆண்டின் முதல் தவணை நிதி கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்..!

மத்திய அரசு
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு மூன்று தவணைகளாக 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதில் "தமிழ்நாடு" இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறைக்கு, ஒன்றிய அரசின் Samagra Shiksha திட்டத்தின் கீழ், 2024-2025 ஆண்டில் 3 தவணைகளாக வழங்கப்பட வேண்டிய நிதியில் முதல் தவணை கூட இன்றுவரை விடுவிக்கப்படவில்லை.
 
இதை சுட்டிக்காட்டினால், நாம் பொய்யைப் பரப்புவதாகவும், 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு எந்த மாநிலத்திற்கும் இன்னும் விடுவிக்கவே இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள்.
 
ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, எந்தெந்த மாநிலங்களுக்கு மூன்று தவணைகளாக 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதி விடுவிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதில் "தமிழ்நாடு" இல்லை.
 
போகிற போக்கில் பொய் சொல்லிவிட்டு, அதில் அம்பலப்படும்போது அதுகுறித்த எந்த சஞ்சலமும் இல்லாமல் அடுத்த பொய்யால் ஈடுகட்ட நினைப்போரை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
 
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வகையில் அரசியல் செய்வதை இனியாவது அவர்கள் கைவிட வேண்டும்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
கும்பமேளா மிகப்பெரிய வெற்றி.. எந்த பிரச்சனையும் இல்லை.. சமாஜ்வாடி குற்றச்சாட்டுக்கு பிரபல நடிகை பதில்..!