வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (14:36 IST)

தமிழகத்தில் பரவும் டெங்குக் காய்ச்சல்

தமிழகத்தில் கொரொனா பரவல் பாதிப்புகள் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிகரித்த நிலையில், தமிழக அரசு இதைத் தடுக்கவே, பல்வேறு முயற்சிகள் எடுத்து, விழிபுணர்வு நடவடிக்கைகளும், கொரொனா கட்டுப்பாடுகளும், ஊரடங்கு உத்தரவுகளும்  விதிக்கப்பட்டன.

அதன்பின்னர், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது, தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலும், டெங்கும் தீவிரமாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் உண்டாக்கும் காய்ச்சல் பாதிப்புகளில் 55% முதல் 60% வரையிலான காய்ச்சல்கள் மட்டுமே என்ன காய்ச்சல் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டுள்ள இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.